×

ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்-அதிகாரிகள் நடவடிக்கை

ராஜபாளையம்/திருவில்லி : ராஜபாளையம், திருவில்லிபுத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தலைமையில் ராஜபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலை புறம்போக்கு பகுதியில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவக்கப்பட்டது. இதில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், வருவாய் ஆய்வாளர் மலர்விழி தங்கபுஷ்பம், விஜயலட்சுமி மற்றும் அமிர்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் நில அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

சமுசிகாபுரம் கிராம ஊராட்சிக்கு பாத்தியப்பட்ட மேல இலுப்பிலாங்குளம் கண்மாய், புத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட பெரிய முல்லைகுளம் கண்மாய், அய்யன் கொல்லங்கொண்டான் வடக்கு வெங்காநல்லூர் கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு பாத்தியப்பட்ட புதுகுளம் கண்மாய், சேத்தூர் குறு வட்டத்திற்குட்பட்ட முத்துசாமிபுரம் கிராமம் ஓடை ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுவரை 6 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ராஜபாளையம் வட்டத்திலுள்ள நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெறும் என்று ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதேபோல் திருவில்லிபுத்தூர் பகுதியில் நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆலத்தூர் பகுதியில் நீர்நிலை ஓடை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி மற்றும் சிவகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி, கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் அகற்றினர்.

வத்திராயிருப்பு தாலுகா மூவரை வென்றான் கிராமம் கட்டைய தேவன்பட்டி வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் இலந்தை குளம் கிராமத்தில் கொடிக்கால் ஊரணி, கணக்கன் ஊரணி, சோலை நாய்க்கர் ஊரணி ஆகியவற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி, வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, சத்தியவதி, மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பவுன் செல்வி, ஜான் கென்னடி, கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணன், வேலம்மாள் மற்றும் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் அகற்றினர்.

Tags : Rajapalayam ,Srivilliputhur ,Vatriyiruppil , Rajapalayam / Thiruvilli: Water level encroachments have been removed at Rajapalayam, Srivilliputhur. Sattur Revenue Collector
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!