×

சிறந்த பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றது ஹாலிவுட் திரைப்படமான'Dune'!!

வாஷிங்டன்: ஹாலிவுட் திரைப்படமான Dune பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்துள்ளது. அகாடமி அவார்ட்ஸ் என்று அழைக்கப்படும் 94வது ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. Dune திரைப்படம் தற்போது வரை 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தி உள்ளது. சிறந்த  தயாரிப்பு வடிவமைப்பு, ஒளியமைப்பு, விஷுவல் எபக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் Dune திரைப்படம் விருதுகளை அள்ளியது.

*சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.

*சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா கேஸ்டெய்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக  இந்த விருது கிடைத்துள்ளது.

*தி பவர் ஆஃப் தி டாக் திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

*ஷியான் ஹெட்டார் இயக்கிய கோடா சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.

*சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார்

*சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை encanto திரைப்படம் வென்றது.

*சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கோடா படத்திற்காக டிராய் கோட்சர் வென்றார்.செவித்திறன் குறைபாடு உள்ள டிராய் கோட்சர் ஆஸ்கர் விருது பெற்ற முதல் நடிகராவார்.

*செவித்திறன் குறைபாடு கொண்ட மார்லீமாட்லின் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற முதல் மாற்றுத்திறனாளி ஆவார்.

*94-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ரைட்டிங் வித் பயர் என்கிற ஆவணத்திரைப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இதன்மூலம் இந்தியாவின் ஆஸ்கர் கனவு தகர்ந்துள்ளது....

*ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணத்திரைப்படத்துக்கான விருதை சம்மர் ஆஃப் சோல் (SUMMER OF SOUL) திரைப்படம் வென்றுள்ளது....

*கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை கென்னத் பிரானா வென்றுள்ளார். பெல்பாஸ்ட் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது....

*94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை சியான் ஹெடெர் வென்றுள்ளார். கோடா படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

*கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆஃப் பேஸ்கட் பால்’ (THE QUEEN OF BASKETBALL) என்கிற குறும்படம் வென்றுள்ளது.

*94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை ‘தி விண்ட்ஷீல்டு வைப்பர்’ (THE WINDSHIELD WIPER) திரைப்படம் வென்றுள்ளது.

*94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை ‘டிரைவ் மை கார்’ (Drive My Car) திரைப்படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இதனை யுசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) என்பவர் இயக்கி இருந்தார்.

*அனேல் கரியா இயக்கிய ‘தி லாங் குட்பாய்’ (The Long Goodbye) குறும்படம், சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று அசத்தி உள்ளது.

*டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. இதில் இந்தியர் ஒருவரும் ஆஸ்கர் வென்றுள்ளார். அவர் பெயர் நமித் மல்கோத்ரா. இவர் டியூன் படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டார். அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.


Tags : Hollywood , Best, Background Music, Cinematography, Oscar, Award, Hollywood, Tune
× RELATED எனக்கு 70 வயது ஆகிவிட்டதா? ஜாக்கி சான் அதிர்ச்சி