×

உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை: துருக்கியில் இன்று நடக்கிறது

துருக்கி: துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நான்கு வாரங்களைத் தாண்டியும் போர் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே பெலாரசில் இதுவரை நடைபெற்ற 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே, துருக்கியில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

துருக்கியில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்தார். இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே துருக்கியில் 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது என உக்ரைன் மந்திரி டேவிட் அரகாமியா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


Tags : Ukraine ,Russia ,Turkey , The next phase of peace talks between Ukraine and Russia: taking place today in Turkey
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...