×

25 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தரங்கம்பாடி: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தர்மபுரம் ஆதினத்துக்கு சொந்தமான அபிராபி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இது திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற கோயிலாகும். தேவர்கள், அசுரர்கள் கொண்டு வந்த அமுதகடம் இங்கு வைக்கப்பட்டபோது அமுதகடமே சிவலிங்க வடிவமாக மாறியதால் இவ்வூர் கடவூர் என பெயர் பெற்றதாகவும், இறைவனும் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோயிலில் 1997ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு  கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த சில மாதங்களாக திருப்பணி நடந்தது. கடந்த 23ம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 8வது கால யாகசாலை பூஜை நடந்தது. முன்னதாக கடங்கள் புறப்பாடு நடந்தது. இதையடுத்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திருவாவடுதுறை குருமகாசன்னிதானம் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thirukkadaiyur ,Amirthakadeswarar Temple ,Sami , Thirukkadaiyur Amirthakadeswarar Temple Kumbabhishekam riots after 25 years: Sami darshan by tens of thousands of devotees
× RELATED ராணிப்பேட்டை அருகே உள்ள...