×

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நாக சைதன்யா நடிக்கிறார். மாநாடு படத்துக்கு பிறகு அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள மன்மத லீலை படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதையடுத்து நாக சைதன்யா நடிக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இது ஆக்‌ஷன் காதல் கலந்த படமாக உருவாகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு, மாநாடு படத்தின் இந்தி ரீமேக்கை அடுத்த ஆண்டில் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். அதில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்கிறார்.

Tags : Naga Chaitanya ,Venkat Prabhu , Naga Chaitanya under the direction of Venkat Prabhu
× RELATED விஜய் படத்தின் தலைப்பு என்ன: தயாரிப்பாளர் விளக்கம்