×

16 வருடத்துக்கு பின் சினிமாவில் லைலா

சென்னை: நடிகை லைலா, 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். நந்தா, பிதாமகன், பரமசிவன், தில்லு, உன்னை நினைத்து, மவுனம் பேசியதே உள்பட பல படங்களில் நடித்தார் லைலா. கடைசியாக 2006ம் ஆண்டில் அஜித் நடித்த திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அதன் பிறகு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் மெஹதி என்பரை திருமணம் செய்தார். மும்பையில் செட்டில் ஆகிவிட்ட லைலா, அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இப்போது 16 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் லைலா. இரும்புத் திரை, ஹீரோ படங்களை இயக்கியவர் மித்ரன். அவர் இயக்கி வரும் படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி, ராசி கன்னா, ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் நடிக்க லைலா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கிறார். தந்தை கார்த்திக்கு ஜோடியாக லைலா நடிக்கிறார் என கூறப்படுகிறது.


Tags : Laila , Laila in cinema after 16 years
× RELATED நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு...