×

விஐடி சென்னையில் விருது வழங்கும் விழா: கோ.விசுவநாதன் பங்கேற்பு

சென்னை: நாவலர் - செழியன் அறக்கட்டளை, தமிழ் இலக்கிய தோட்டம், கனடா மற்றும் விஐடி சென்னை உடன் இணைந்து நாவலர் தகைசால் விருது வழங்கும் விழா விஐடி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாவலர் - செழியன் அறக்கட்டளையின் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழை பரப்புவதற்கும், காப்பாற்றுவதற்கும் நம்மால் முடிந்த வரை பணியாற்ற வேண்டும். அதேபோல் நாவலர் நெடுஞ்செழியன் மிகவும் கொள்கை பிடிப்புடையவர் மற்றும் நேர்மையானவர். நம்முடைய தமிழக அரசு நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் விருது வழங்க வேண்டும். நடமாடும் பல்கலைக்கழகம் என பேரறிஞர் அண்ணாவால் பாராட்டு பெற்றவர் நாவலர் நெடுஞ்செழியன், என கூறினார்.

விழாவில் நாவலர் தகைசால் விருது 2020ம் ஆண்டிற்கான விருது மற்றும் ரொக்கப்பரிசு ரூ.2 லட்சத்தை மறைமலை இலக்குவனாருக்கும், 2021ம் ஆண்டிற்கான நாவலர் தகைசால் விருது மற்றும் ரொக்கப்பரிசு ரூ.2 லட்சத்தை கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வழங்கினார். விழாவில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி, வழக்கறிஞர் சம்பத், விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதன், தமிழறிஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக விஐடி சென்னை கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் வரவேற்புரையாற்றினார். விஐடி சென்னை இணை துணை வேந்தர் வி.காஞ்சனா பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் அறிமுக உரையாற்றினார். முடிவில் நாவலர் நெடுஞ்செழியன் குடும்ப உறுப்பினர் பன்னீர்செல்வம் நன்றி உரையாற்றினார்.

Tags : VIT ,Chennai ,Co. Viswanathan , Award Ceremony at VIT Chennai: Participation of Co. Viswanathan
× RELATED வேலூரில் தினகரன் -விஐடி இணைந்து...