×

ரூ.1 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

பொன்னேரி: பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட தேவதானம், திருப்பாலைவனம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். அதன்பேரில் பொன்னேரி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவதானம் ஊராட்சி உள்ள வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை காட்டூர் நில அளவையர் அருண்குமார். காட்டூர் வருவாய் ஆய்வாளர் சஞ்சீவி பெருமாள். கிராம நிர்வாக அலுவலர்கள் மஞ்சு பார்கவி, மெய்யழகன், நல்லீஸ்வரன் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் ரூ.3.1/2 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டனர். அதேபோல் பிரளியம்பாக்கம் ஊராட்சியில் அரசுநிலங்களில் பயிர்செய்யப்பட்டுள்ள விளைந்த பயிர்களை சேதப்படுத்தாமல் பயிர்செய்த விவசாயிகளுக்கு அறுவடை செய்வதற்கான காலக்கெடு விதித்தனர்.

அதன்படி பொன்னேரி வருவாய்த்துறையினர் வருவாய் ஆய்வாளர் அன்புசெல்வன், கிராமநிர்வாக அலுவலர் ஹேமாவதி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் அறுவடை செய்யும் இயந்திரம் கிடைக்காததால் அப்பகுதி மக்களை வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிலங்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ரூ.1 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 10 ஏக்கர் சுற்று அளவில் 25 செண்ட் நிலம். மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த மக்களுக்கு ஏரி மற்றும் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து பயிர் செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

Tags : Government Land , Rs 1 crore worth of government land reclaimed: Revenue officials take action
× RELATED பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பரங்கிமலை...