அம்மையார்குப்பத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி: எஸ்.சந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை எஸ்.சந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிரதான சாலை அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால்வாய் 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் சாலைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் தேங்கி நிற்பதை முற்றிலும் தவிர்க்கப்பட்டு மழைநீர் ஏரிக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.என்.சண்முகம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.பழனி, அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயந்தி சண்முகம், பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ், ஒப்பந்ததாரர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: