ஆர்.கே.பேட்டையில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா

பள்ளிப்பட்டு: ஆர்.கே‌.பேட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிறந்த பள்ளி விருது பெற்றவர்களுக்கு பாராட்டு  என முப்பெரும் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. வட்டார தலைவர் ரவீந்திரநாத் தலைமை வகித்தார். ஆசிரியர் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தின் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் கோட்டீஸ்வரி வரவேற்றார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் விழாவினை துவக்கி வைத்து ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிறந்த பள்ளி விருது பெற்றவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், சங்கத்தின் மாநில பொருளாளர் ஜெகநாதன், முன்னாள் மாநில பொருளாளர் கதிரவன், மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் ராஜாஜி, மாவட்ட பொருளாளர் சேகர் உட்பட சங்க நிர்வாகிகள் ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் பணியாற்றி வரும் ஆசிரியை, ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Related Stories: