கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

காஞ்சிபுரம் : காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் 7 நாட்கள் கொண்ட சிறப்பு முகாம் முசரவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமின் முதல்நாள் துவக்க விழாவில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் .காஞ்சனா வரவேற்றார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார், தாளாளர் அரங்கநாதன், தலைவர் முனைவர்சாய்ராம், செயலாளர் மாதவன், பொருளாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் கு.வெங்கடேசன் சிறப்பு முகாமின் நோக்கம் மற்றும் மாணவர்களின் செயல்கள் குறித்து பேசினார். இச்சிறப்பு முகாமினை நேரு யுவகேந்திரா சங்க காஞ்சிபுரம் மாவட்ட இளையோர் அலுவலர், சரவணன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாரவி, பள்ளி தலைமையாசிரியர் சுசிலா, கல்லூரி துணைமுதல்வர் பிரகாஷ், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த சிறப்பு முகாமில் ஒவ்வொரு நாளும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வல மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள். ஒவ்வொருநாளும் யோகா மற்றும் விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன, கிராமப்புற கோயில்கள், சர்ச், சமுதாய கூடம், தங்கியிருந்த பள்ளிகூடம், தண்ணீர் தொட்டி அமைந்த மைதானம், சாலைகள் மாணவர்களைக்கொண்டு தூய்மை செய்யப்பட்டது, நிறைவு விழாவில் சென்னைப் பல்கலைக்கழக காஞ்சிபுரம் மாவட்ட என்.எஸ்.எஸ் நோடல் அதிகாரி வி.ராஜா கலந்துகொண்டு  மாணவர்களின் சேவை செயல்களை பாராட்டினார். முடிவில் நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பேபி  நன்றி கூறினார்.

Related Stories: