சுவிஸ் ஓபன் பேட்மின்டன் சிந்து சாம்பியன்

பாஸல்: சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் புசானனுடன் நேற்று மோதிய சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இப்போட்டி 49 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் களமிறங்கிய இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 12-21, 18-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியிடம் தோற்று 2வது இடம் பிடித்தார். இப்போட்டி 48 நிமிடத்துக்கு நீடித்தது.

Related Stories: