×

சிங்கங்களுக்கு கொரோனா எதிரொலி: முதுமலையில் 28 யானைகளிடம் சளி மாதிரிகள் சேகரிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் நூற்றாண்டு புகழ்பெற்ற தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 2 குட்டி யானைகள், 5 கும்கி யானைகள் உட்பட 28 வளர்ப்பு யானைகள் உள்ளன.  தற்போது கொரோனா பரவல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. சமீபத்தில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் கொரோனாவுக்கு பலியானது. இதையடுத்து, முதுமலை தெப்பக்காடு, டாப்சிலிப் உள்ளிட்ட காப்பகங்களில் உள்ள முகாம் யானைகளுக்கு கொரோனா மாதிரி பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.  இதன் தொடர்ச்சியாக நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் கோரோனோ பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்தது. யானைகளிடம் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் இசாட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளது. இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருஷ்ணகுமார் கௌசல் கூறுகையில், ‘‘யானைகளிடம் பெறப்பட்ட சளி மாதிரிகள் உத்தரபிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதேபோல் முன்னுரிமை அடிப்படையில் பாகன்கள் உள்ளிட்ட 52 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்றார்.அமைச்சர் ஆய்வு பொள்ளாச்சியை  அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு  உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில், கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 22 யானைகளுக்கும் வரகளியார்  பயிற்சி முகாமில் உள்ள 6 யானைகளுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. கோழிகமுத்திக்கு நேற்று வனத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கூறுகையில், ‘‘இங்கு எடுக்கப்படும்  மாதிரிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள, இந்திய கால்நடை துறை ஆராய்ச்சி  நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விரைவில் ஆய்வு முடிவுகள்  வெளிவரும், யானைகளுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டால்,  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்….

The post சிங்கங்களுக்கு கொரோனா எதிரொலி: முதுமலையில் 28 யானைகளிடம் சளி மாதிரிகள் சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Mudumalai Tiger Reserve ,Nilgiris ,Theppakadu ,
× RELATED முதுமலையில் பருவ மழைக்கு முந்தைய...