பேராவூரணி பேரூராட்சி 100% வரிவசூல் செய்து சாதனை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக வரிவசூல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது செயல் அலுவலராக புதிதாக பொறுப்பேற்ற பழனிவேல் வரிவசூல் செய்ய பொதுமக்கள், வணிகர்கள், கடை வாடகைதாரர்களை நேரடியாக சந்தித்து வரி செலுத்த வேண்டியதின் அவசியம் குறித்து எடுத்து கூறினார். இதன் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் 100 சதவீதம் வரிவசூல் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் கூறியது: பேராவூரணி பேரூராட்சியில் தீவிர வசூல் முனைப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், வீட்டுவரி, தொழில் வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகள், பல்வேறு வகை கேட்பு இனங்கள் இந்தாண்டு நூறு விழுக்காடு நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள், வணிகர்கள், அலுவலர்களுக்கு நன்றி என்றார்.

Related Stories: