×

32-வது நாளாக நீடிக்கும் ரஷ்யா - உக்ரைன் போர்: ரஷ்ய படைகள் விரட்டியடிக்கப்பட்டதாக உக்ரை பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை

கீவ்: போர் நீடித்துவரம் நிலையில் எல்லை நகரான டிரோஸ்டியாமேட்ஸை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ளன. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 32-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய படைகள் கடந்த ஒன்றாம் தேதி கைப்பற்றிய துமி ஓபலாஸ் மாகாணத்தில் உள்ள எல்லை நகரம், டிரோஸ்டியாமேட்ஸை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ளன.

அங்கு ரஷ்ய படைகள் விரட்டியடிக்கப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே மாறியபோல் நகரை தக்கவைக்க தேவையான ஆயுதங்களை வழங்க முன்வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்க தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

செர்னிஹிவ் அணுமின்நிலைய ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளன. அப்போது நிகழ்ந்த தாக்குதலில் 3 பேர் கொள்ளப்பட்டன. இந்நிலையில் செர்னிஹிவ் அணுமின்நிலையத்தை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது.

வடக்கு உக்ரைனில் செர்னிஹிவ் நகரம் ரஷ்ய படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அந்த நகரம் மற்றொரு மரியபோல் ஆக மாறும் நிலை உள்ளது. அங்குள்ள மக்கள் குடிநீருக்கும், உணவுக்கும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படைகளால் தாக்கப்பட்ட எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்த செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.


Tags : Russia ,Ukraine War ,Ministry of Defense of Ukraine , Russia Ukraine War, Ukraine Ministry of Defense, Report
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...