பிரசித்தி பெற்ற தொட்டபெட்டா மலை சிகரம் ஓராண்டிற்கு பின் திறப்பு

நீலகிரி: பிரசித்தி பெற்ற தொட்டபெட்டா மலை சிகரம் ஓராண்டிற்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளது. மழையால் சாலையில் ஏற்பட்ட பழுது காரணமாக தொட்டபெட்டா சிகரம் கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்தது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக திறக்கப்பட்டது. காலை முதலே சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் தொட்டபெட்டா சிகரத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

Related Stories: