×

திருப்பதியில் திருமண நிச்சயதார்த்ததிற்கு சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி; 45 பேர் காயம்

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய தனியார் பேருந்தில் 52 பேர் புறப்பட்டு வந்தனர். இந்த பேருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு பாக்கராப்பேட்டை மலைப்பாதை வழியாக திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த பேருந்து அதிவேகம் காரணமாக கட்டுபாட்டை இழந்த பேருந்து வளைவில் சாலையோரம் உள்ள 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதனை கவனித்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள்  இதுகுறித்து சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சந்திரகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட எஸ்.பி. வெங்கட அப்பல நாயுடு மற்றும் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. வெங்கட அப்பல நாயுடு சிறப்புக் தனிப்படை போலீசார் மற்றும் தீயணைப்புப் வீரர்கள்  மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

கும் இருட்டில் 50 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில்  இருப்பவர்களின் அழுகை மட்டுமே கேட்டது, சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததால் எதையும் பார்க்க முடியாத நிலையில் போலீசார் சம்பவ இடத்துக்கு கயிறு கட்டி  காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருள் சூழ்ந்த இடத்தில்  வனப்பகுதியில் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து, காயமடைந்தவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் பலரது உயிரைக் காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒட்டு மொத்த போலீசாரும் , தீயணைப்பு வீரர்களும் மீடு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை உரிய நேரத்தில் மீட்டனர். இருபினும் இந்த விபத்தில் நபி ரசூல் - பேருந்து ஓட்டுநர், மல்லிசெட்டி வெங்கப்பா-60,  மல்லிசெட்டி கணேஷ்-40,  காந்தம்மா-40, மல்லிசெட்டி முரளி-45, யசெஸ்வினி-08, பேருந்து  கிளீனர் விவரம் தெரியாத நிலையில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.

45 பேர் காயமடைந்து திருப்பதி ரூயா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் மருத்துவ மனையில் நேரில் பார்வையிட்டு சிறப்பான மருத்துவ சேவைக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags : Tirupathi , Tirupati, engagement, accident
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...