சென்னை: தெலுங்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான ரவிராஜா பினிஷெட்டியின் மகன் ஆதி பினிஷெட்டி. தமிழில் ‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘யுடர்ன்’, ‘கிளாப்’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ‘தி வாரியர்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் ‘யாகாவாராயினும் நா காக்க’, ‘மரகத நாணயம்’ ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆதி, நிக்கி கல்ராணியின் காதலுக்கு இருவீட்டார் சம்மதித்ததை தொடர்ந்து, கடந்த 24ம் தேதி அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. திருமணம் குறித்து ஆதி கூறுகையில், ‘கடந்த 6 வருடங்களாக நானும், நிக்கி கல்ராணி
யும் காதலித்துவருகிறோம். திருமணம் செய்துகொள்ள இருவீட்டு பெற்றோரும் சம்மதித்ததை தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் மே மாதம் எங்கள் திருமணம் நடக்கிறது. என்னிடம் முதன்முதலில் காதலை வெளிப்படுத்தியது நிக்கி கல்ராணிதான்’ என்றார். திருமணத்துக்கு பிறகும் நிக்கி கல்ராணி தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று தெரிகிறது.