வரும் 31ம் தேதி வரை பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதமும் வழங்கப்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் விருது பெற விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவள்ளூர் என்ற விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம். எனவே பசுமை சாம்பியன் விருதுக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: