×

மாளிகைமேடு அகழாய்வில் பழங்கால மண்பானை கண்டுபிடிப்பு

ஜெயங்கொண்டம்: கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் 25 செ.மீ உயரம் கொண்ட பழங்கால மண்பானை கண்டுபிடிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியினை கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அகழாய்வு நடந்து வரும் நிலையில்  25 செ.மீ உயரம், 12.5 செ.மீ அகலம் கொண்ட பழங்காலத்து மண்பானை, மண்ணாலான கெண்டி மூக்கு மற்றும் 30 அடுக்கு கொண்ட செங்கல் சுவர் கண்டு பிடிக்கப்பட்டது.

அதில், 25 செ.மீ உயரம் மற்றும் 12.5 செ.மீ அகலம் கொண்ட பானை ஒரு பகுதி சிறிது உடைந்த நிலையில் உள்ளது. இந்த பானை தரை தளத்தில் இருந்து 18 செ.மீ ஆழத்தில் கிடைத்தது. இதுவரை மாளிகைமேடு அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களில் செப்பு நாணயங்கள், செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள், வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் மற்றும் சீனபொருட்கள் ஆகியவை அடங்கும்.

Tags : Maligaimedu , Palace, ancient, pottery, discovery in excavation
× RELATED கீழடி, கொற்கை, மாளிகைமேடு பகுதிகளில் அகழாய்வு பணி மீண்டும் துவங்கியது