×

வாழ்வா, சாவா நிலையில் தென்ஆப்ரிக்காவுடன் இந்தியா நாளை மோதல்

கிறிஸ்ட்சர்ச்: 8 அணிகள் பங்கேற்ற  12வது ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்  நியூசிலாந்தில் நடந்துவருகிறது. இதில் லீக் சுற்றுபோட்டிகள் நாளையுடன் முடிகிறது. பட்டியலில் முதல் 2 இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றது விட்டது. மற்ற 2 அணி எவை என்பது நாளை தெரிந்துவிடும். இந்தியா 6 போட்டியில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 5வது இடத்தில் உள்ளது. நாளை தென்ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் கட்டாய வெற்றி நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.

வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். தோல்வி அடைந்தால் வெஸ்ட்இண்டீசுக்கு வாய்ப்பு கிடைக்கும்.  வெஸ்ட்இண்டீஸ் 7, இங்கிலாந்து 6 புள்ளியுடன் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து நாளை வங்கதேசத்தை வீழ்த்தி சிக்கிலின்றி அரையிறுதி வாய்ப்பை பெறும்.


Tags : India ,South Africa ,Vavava ,Sawa , Life, Sava, South Africa, India, Conflict
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!