×

மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்-10 பேர் காயம்

மேலூர் : மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 10 பேர் காயமடைந்தனர்.
மேலூர் கொட்டாம்பட்டி அருகே வி.புதூரில் உள்ள முத்துபிடாரி அம்மன், முடிமலையாண்டி, வேப்பிலைக்காரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. கிராமத்தின் சார்பில் ஜவுளி பொட்டலங்கள் சுமந்து வரப்பட்டு, காளைகளுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் மாடு பிடித்தவர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Manchurian , Melur: At least 10 people were injured in a road accident near Melur yesterday.
× RELATED விருப்ப ஓய்வு பெற மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்