இலங்கையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கோத்தபய முதல்முறை பேச்சு

கொழும்பு: இலங்கை அதிபராக பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், முதல்முறையாக தமிழ் சிறுபான்மை அரசியல் கட்சி தலைவர்களுடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றவும், 9 மாகணங்களுக்கான தேர்தலை நடத்தவும் இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

தமிழ் அரசியல் கட்சிகளும் இதையே வலியுறுத்தி வருகின்றன. இலங்கை அதிபராக கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற பின்பு, இரண்டு முறை அவரை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது கூட்டம் நடக்கவிருந்த நிலையில், 2 முறையும் எந்த காரணமும் இன்றி அது ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது போலீசை ஏவி விட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அதிபராக பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், முதல் முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, 13வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: