×

நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பிளாஸ்டிக் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து இதுவரை ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக நீலகிரி ஆட்சியர் தகவல் அளித்திருக்கிறார். அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது; அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீலகிரி, கொடைக்கானலில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் உத்தரவை அமல்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.


Tags : Icourt ,Nilagiri ,Kodaikanal , Nilgiris, Kodaikanal, Plastic, Seal, High Court
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்