ராணிப்பேட்டை அருகே விபத்து ஆவடியை சேர்ந்தவர் உள்பட 2 பேர் பரிதாப பலி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இன்று அதிகாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது பைக் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது நண்பர் பரிதாபமாக இறந்தனர். சென்னை ஆவடி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (40). இவர் நெட்சென்டர் நடத்தி வந்தார். ஆனந்தனும், கார்த்திக்கும் நண்பர்கள். நேற்று நண்பரை பார்ப்பதற்காக கார்த்திக், ராணிப்பேட்டைக்கு வந்தார். வேலை விஷயமாக இன்று அதிகாலை இருவரும் திருவலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அக்ராவரம் பெல் சாலை வழியாக சென்றபோது திடீரென நிலைதடுமாறிய இவர்களது பைக், அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: