மதுரையில் 2023 ஜன.31க்குள் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணிகள் முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

மதுரை: மதுரையில் 2023 ஜனவரி 31க்குள் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணிகள் முடிக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். பழனி - கொடைக்கானல், கொடைக்கானல் - மூணாறு சாலையை தரம் உயர்த்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.  ரூ.114 கோடி மதிப்பீட்டில் மதுரை - நத்தம் சாலையில் 2.61 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

Related Stories: