×

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். நடராஜர் கோயிலை மையமாக வைத்து தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் நேற்று பிறப்பித்திருந்தார்.

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம் பல மேடையில் யாரும் ஏறக்கூடாது, தரிசனம் செய்யக்கூடாது, தேவாரம் பாடக்கூடாது என கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். இதற்க்கு பொதுமக்கள், பக்தர்கள், அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். சிதம்பரம் நகரில் யாரும் போராட்டம் நடத்த வேண்டாம், இது குறித்து அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என கோட்டாட்சியர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். அதாவது சிதம்பரம் கோயிலில் நடைபெற்று வரும் சம்பவம் தொடர்பாக அரசாணைகள் அனைத்தும் அரசு உத்தரவுகள் அனைத்தும் கவனமாகா ஆராய பட்டதாகவும், இந்த அரசாணை குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,அரசின் பல்வேறு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடைபெற்று வந்ததாகவும் அண்ட் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் அரசின் முடிவுகளை எதிர்நோக்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் இதர போராட்ட குழுவினர் யாரும், அரசின் உத்தரவு யாரும் வரை சிதம்பரம் நடராஜர் கோயிலை மையமாக வைத்து போராட்டங்களோ ஆர்பாட்டங்களையோ நடத்தத் கூடாது எனவும், கூட்டமாக கூடி ஆலோசனை மேற்கொள்ள கூடாது எனவும் கோட்டாட்சியர் ரவி 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த தடை உத்தரவு ஒரு மாத காலத்திற்கு இருக்கும் எனவும், நேற்று முதலே இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பக்தர்கள் தரப்பில் பல்வேறு கருத்துக்கள் எழுந்த நிலையில் இன்று கோட்டாட்சியர் ரவி தடை உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். அதாவது சிதம்பரம் நகரில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் பக்தர்கள் நலனுக்காக இந்த தடை உத்தரவு விளக்கி கொல்லப்படுவதாக கோட்டாசியர் ரவி தெரிவித்தார்.


Tags : Kottatchyar ,Chidambaram , Chidambaram, 144 restraining order, quotient notice
× RELATED பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம்