×

விளாத்திகுளம் அருகே பரபரப்பு வேனில் கடத்த முயன்ற 2,700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது; 3 பேர் தப்பியோட்டம்

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே வேனில் கடத்த முயன்ற 2 ஆயிரத்து 700 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் பகுதியில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதூர் காவல்நிலையம் எஸ்.ஐ. விநாயகம் மற்றும் போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது புதூர் அம்பேத்கர் தெரு பொது கழிப்பிடம் பகுதியில் 4 பேர் கும்பல், வேனில் ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி கடத்துவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் கும்பலை சேர்ந்தவர்கள் தப்ப முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார். மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பினர்.

விசாரணையில் பிடிபட்டவர் கோவில்பட்டியை சேர்ந்த ராமர்பாண்டி மகன் ராஜா(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும்  தலா 50 கிலோ வீதம் ெமாத்தம் 54 மூடைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடத்தல் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Vilathikulam , Vilathikulam, van, smuggled, 2,700 kg, racun rice, confiscated
× RELATED விளாத்திகுளம் அரசு கல்லூரியில்...