×

இலங்கையிலிருந்து வருவோர்க்கு சட்டரீதியாக உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!!


சென்னை : இலங்கையிலிருந்து  அகதிகளாக  வரும்  ஈழத் தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவே உதவிகள் வழங்கப்படும் என்ற  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  வரவேற்புத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்கள் தமிழகத்திற்குள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இலங்கைத் தமிழர்கள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஏராளமானோர் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்தி தரும். ஈழத் தமிழர்கள் பிரச்சினையை சட்டரீதியாக கையாளுவது குறித்து மத்திய அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்,என்றார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்து கி.வீரமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “இலங்கையில் அதிபர் இராஜபக்சே தலைமையிலான ஆட்சி பொருளாதாரத்தில் மிகவும் நலி வடைந்த மக்கள், விலைவாசி உயர்வு, நிதித் தட்டுப் பாட்டால் தத்தளித்து வருகிறார்கள்.இலங்கை குடிமக்களில் தமிழர்கள் கடும் பஞ்சத்தால் - வறுமையால் அவதிப்படுகிற நிலையில், ‘‘பஞ்சம்‘’ காரணமாக வேறு வழியின்றி மீண்டும் ‘ஏதிலிகளாக’ எம் தொப்புட்கொடி உறவுகள் தமிழ்நாடு நோக்கி வருவோருக்கு ஆதரவுக் கரத்தை, மனிதாபி மானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு தி.மு.க. அரசு, வழங்கி சட்டப்படி உதவிகள் செய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கூறியிருப்பது, கருணை மழை பொழிந்ததாகவே கருதி வரவேற்கப்படவேண்டும். நிலைமை சரியாகும் வரை அவர்களுக்குத் தமிழ்நாடு ஆதரவு காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : K. Veeramani ,Chief Minister ,Stalin ,Sri Lanka , Sri Lanka, Chief Minister Stalin, Announcement, K. Veeramani
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...