×

கோடியக்கரை கடலில் நீரோட்டம் மாற்றம் ஏற்பட்டதால் சூறாவளி காற்று: மீனவர்கள் அச்சம்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை கடலில் தீடீர் நிரோட்டம் மாற்றம் ஏற்ப்பட்டதால் சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளிகாற்று கடலில் இருந்து கிளம்பி சூறாவளி நோக்கி வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கிவைத்திருந்த சுமார் 50 கிலோ எடை கொண்ட மீன்பிடி  வலைகட்டை சுமார் 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசி பந்தாடியது.

மேலும் கடற்கரையில் இருந்த கீற்று கொட்டகை சூறாவளி காற்றில் கீற்றுகள் பறந்தன. இதை பார்த்த மீனவர்கள் அச்சம் அடைந்து கூச்சல் போட்டு கொண்டு ஓட்டம் பிடித்தனர். சுமார் 5 நிமிடம் வீசிய இந்த காற்றால் கடற்கரை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. கடற்கரையில் மீனவர்கள் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Kodiyakar Sea , Hurricane Katrina: Fear among fishermen
× RELATED பொறியியல் மாணவர் சேர்க்கை...