படப்பையில் 2016ல் கைதான 2 மாவோயிஸ்ட் காவல் நீட்டிப்பு: காஞ்சிபுரம் கோர்ட் உத்தரவு

காஞ்சிபுரம்: படப்பையில் 2016ல் கைதான மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பெண் உட்பட 2 பேரின் காவலை நீட்டித்து காஞ்சிபுரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ரீனா ஜாய்ஸ்மேரி (42), மகாலிங்கம் (50). இவர்கள் இருவரும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பதவியில் இருந்துள்ளனர். இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்தும் வந்துள்ளனர். கடந்த 21.7.2016ம் தேதி இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தபோது, காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ரீனா ஜாய்ஸ்மேரி மீது 3 வழக்குகளும், மகாலிங்கத்தின் மீது 10 வழக்குகளும் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதையடுத்து இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன், இருவரையும் வரும் ஏப்ரல் 4ம்தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ரீனா ஜாய்ஸ்மேரி வேலூரில் உள்ள பெண்கள் மத்திய சிறைச்சாலையிலும், மகாலிங்கம் மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்படுவதற்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

Related Stories: