×

எந்த விவசாயியும் கடன் கேட்டு வங்கிக்கு செல்லாத நிலை ஏற்படும்!: வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை..!!

சென்னை: 10 ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்,

10 ஆண்டில் விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம்:

10 ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும். கரும்பு, நெல், கீரை பயிரிடும் விவசாயிங்கள் ஒவ்வொரு தரப்பினருக்கும் தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை பாமக விவசாயத்துக்காக நிழல் நிதிநிலை அறிக்கையாக வெளியிட்டு வந்ததை திமுக அரசு நனவாக்கியது. எதிர் தரப்பினரின் கருத்து சிறந்ததாக இருந்தால் திமுக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடியது.

கடனுக்காக விவசாயி வங்கிக்கு செல்லாத நிலை ஏற்படும்:

தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பலனாக எந்த விவசாயியும் கடன் கேட்டு வங்கி வாயிலுக்கு செல்லாத நிலை ஏற்படும். குறுவையில் ஒன்றரை லட்சம் ஏக்கர் கூடுதல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் லாபம் ஈட்டும் தொழிலாக கரும்பு தொழில் மாறும்:

இந்த ஆண்டு கரும்பு கூடுதலாக விளைவிக்கப்பட்டுள்ளது. கரும்பு ஊக்கத் தொகை கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.100 கூட்டி கொடுத்தார்கள். தற்போது இந்த ஆண்டு ஊக்கத்தொகை 195 ரூபாய் அதிகரித்திருக்கிறோம். இதன் மூலம் ரூ.2,950ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு அறிவித்திருக்கும் திட்டங்கள் மூலம், 2 ஆண்டுகளில் கரும்புத் தொழில் லாபமாக மாற்றப்படும். வேளாண் துறை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

தொலைநோக்குத் திட்டம்:

தமிழகத்தில் மூன்று தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மூன்றாவது தொலைநோக்குத் திட்டமாக தேங்காய், பருத்தி, சூரிய காந்தி கரும்பு ஆகிய பயிர்களுக்கான வேளாண் உற்பத்தயில் முதல் மூன்று இடங்களுக்குள் தேசிய அளவில் தமிழகம் இடம் பிடிக்க வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று தொலைநோக்குத் திட்டங்களும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.


Tags : R. KK Banneerselvam , Credit, Farmer, Bank, MRK Panneerselvam
× RELATED ரூ.8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல்...