×

“தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல... வளர்ந்த மாநிலம்...': புள்ளி விவரங்களை அடுக்கி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!!

சென்னை: தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்பதற்கு பல்வேறு புள்ளி விவரங்களை அடுக்கி நிதியமைச்சர் விளக்கமளித்தார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்,

* வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 52 சதவீத இளைஞர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்.

* அரசு வழங்கிய வீடுகளில் வசிப்பவர்கள் வெறும் 14 சதவீதம் பேர்தான்.

* தமிழ்நாட்டில் 66 சதவீதம் குடும்பத்தினர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர்.

* தமிழ்நாட்டில் 75 சதவீத குடும்பங்கள் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.

* நகர்ப்புறங்களில் உள்ள மக்களில் 60 சதவீதம் பேரும், கிராமங்களில் உள்ளவர்களில் 90 சதவீதம் பெரும் சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.

* தமிழ்நாட்டில் 2.06 கோடி குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 2.6 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன.

* தமிழ்நாட்டில் 50 சதவீத வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள் உள்ளன.

* தமிழகத்தில் ஒரே குறை ஒட்டுமொத்த உழைக்கும் வயதில் உள்ளவர்களில் 52 சதவீதம் பேருக்கு தகுதியான வேலை இல்லை என்பது தான் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,Finance Minister ,Pranivel Diagarajan , Tamil Nadu, Poor State, Statistics, Palanivel Thiagarajan
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து...