×

மராட்டியத்தில் தற்கொலை செய்துகொள்ள ரயில் முன் குதித்த இளைஞர்!: மின்னலாய் பாய்ந்து காப்பாற்றிய காவலர்..குவியும் பாராட்டு..!!

தானே: தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் ரயில் முன் குதித்த இளைஞரை கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உதல்வாடி ரயில் நிலையத்தில் காவலர் ரிஷிகேஷ்மான் நேற்று பிற்பகல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே மதுரை விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். ரயில் அதிவேகமாக இளைஞரை நெருங்கி வருவதை கண்ட காவலர், தண்டவாளத்தில் குதித்து இளைஞர் மீது பாய்ந்து அவரை இழுத்து காப்பாற்றினார்.

காவலர் இளைஞரை காப்பாற்றிய சில வினாடிகளில் அதிவேகமாக ரயில் அவர்களை கடந்து சென்றது. பரபரப்பான இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. தனது உயிரை பணயம் வைத்து இளைஞரை காப்பாற்றிய ரயில்வே காவலர் ரிஷிகேஷ்மானை அதிகாரிகளும், பொதுமக்களுக்கும் பாராட்டினர். மீட்கப்பட்ட இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட ரயில்வே காவலர்கள் உரிய ஆலோசனைக்கு பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Marathaland , Marathi, Suicide, Train, Youth, Guard
× RELATED 14 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் யோகேஷ் மதன் மராட்டியத்தில் கைது