×

ஜம்மு காஷ்மீருக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு பட்ஜெட்டில் ரூ.1.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 2 மசோதாக்களை மாநிலங்களவை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான ரூ.1.42 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு மக்களவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த பட்ஜெட் தாக்கலின்போது, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கப்படுவதற்கு முன் நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக ஆளும் பாஜ.வுக்கும் எதிர்க்ட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 மணி நேரம் நடந்த விவாதத்தின்போது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அங்கு நீதி, ஜனநாயகம் நிலை நாட்டப்ப்டடுள்ளது. அங்கு உள்ள மக்களுக்கு பொருளாதார வளர்ச்சியும் சென்று அடைந்திருக்கிறது’’ என்றார்.

Tags : Jammu and ,Kashmir , 1.42 lakh crore for Jammu and Kashmir
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...