நடிகர் சங்க அறங்காவலர்கள் நியமனம்

சென்னை: கடந்த ஞாயிறுக்கிழமை நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அனைத்து பதவிகளையும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி கைப்பற்றியது. எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் 29 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து நடிகர் சங்க அறங்காவலர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக குழுவில் இருந்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோரும், பொதுக்குழுவில் இருந்து கமல்ஹாசன், பூச்சி முருகன், சச்சு ஆகியோரும், செயற்குழுவில் இருந்து ராஜேஷ், லதா சேதுபதி, கோவை சரளா ஆகியோரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: