×

கொறடாவை புகழ்ந்ததால் சிரிப்பலை

பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் எழுந்து கேள்வி கேட்க தொடங்கினார். ஆனால் அவர் கேள்வி கேட்காமல் ஜெயலலிதா, எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை புகழ்ந்து பேசியதுடன், எங்கள் மண்ணின் மைந்தன், எதிர்க்கட்சி கொறடா, கொங்கு சிங்கம், நான் மீண்டும் அவைக்கு வர காரணமாக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கும் நன்றி தெரிவித்து பேசுகிறேன் என்று நீண்ட புகழாரம் பாடினார்.இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் பேச்சை பாதியில் நிறுத்தி, “இது கேள்வி நேரம். இப்போது இப்படி புகழாரம் செய்யலாமா? மானியக்கோரிக்கையில் விவாதம் நடத்தும் போது நீங்கள் இதெல்லாம் சொல்லலாம். அதில் தவறு இல்லை.

இப்போது கேள்வி மட்டும் கேளுங்களேன். ஏன் இப்படி பேசுகிறீர்கள். நேரம் செல்கிறதே” என்று குறிப்பிட்டார்.அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், “எல்லோரும் தலைவர், துணை தலைவரை பாராட்டி நன்றி சொல்கிறார்கள். ஆனால் இப்போதுதான் ஒருவர் கொறடாவை பாராட்டி பேசுகிறார். கொறடாவை யாரும் கண்டுகொள்வது இல்லை. அவராவது பேசிவிட்டு போகட்டுமே” என்று சிரித்தபடி கூறினார். இதையடுத்து அப்பாவு உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் துரைமுருகனின் பதிலை கேட்டு சிரித்தனர். குறிப்பாக, அதிமுக உறுப்பினர்களும் சிரித்தனர்.

Tags : Korata , கொறடாவை Because of praise Laughter
× RELATED கண்டிப்பா வரணும்: பா.ஜ எம்பி.க்களுக்கு கொறடா உத்தரவு