×

காஷ்மீர் பண்டிட்களுக்காக பா.ஜ.க. எதுவும் செய்யவில்லை: நாடாளுமன்றத்தில் தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே குற்றச்சாட்டு

டெல்லி: காஷ்மீர் பண்டிட்களுக்காக கவலைப்படும் பாஜக, அந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்காக இதுவரை எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என நாடாளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே பேசிய காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 14-ம் தேதி காஷ்மீருக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின்னர் அங்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை குறிப்பிட்டு பேசிய அவர், காஷ்மீர் பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் இதுவரை வெளி உலகிற்கு கூறப்படவில்லை என்றார். இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே, காஷ்மீர் பண்டிட்களுக்காக கவலைப்படும் மோடி அரசு, பண்டிட்களுக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றார். ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பண்டிட் என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என்றும் சுப்ரியா சாடினார். பிறந்த குழந்தை கூட 7 வருடங்களில் எழுந்து, நடந்து, பள்ளிக்கூடத்திற்கே சென்றிருக்கும் என்றும் விமர்சித்தார்.    


Tags : Kashmir ,Pandits ,G.J KKA ,Nationalist Kong ,MM GP ,Sule , Kashmir Pandit, BJP , Parliament, Nationalist Congress, Supriya Sule
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!