×

இந்தியாவில் 12-18 வயதினருக்கு நோவாவாக்ஸ் தடுப்பூசி: அவசர பயன்பாட்டிற்கு உபயோகிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி..!!

டெல்லி: இந்தியாவில் 12 முதல் 18 வயதுடைய இளம்பருவத்தினருக்கு நோவாவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை  அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது பெரியவர்களுக்கு கோவேக்சின், கோவிட்ஷீல்டு, ஸ்புட்னிக் வி, மார்டோனா உள்ளிட்ட சில கொரோனா தடுப்பூசிகளும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் கோர்பேவாக்ஸ் என்ற புதிய தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் உற்பத்தி செய்து வருகிறது. nvxcov 2373 என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, கோவோவேக்ஸ் என்ற பிராண்ட் பேரில் இந்தியன் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சந்தை படுத்தப்படுகிறது. மேலும் இது பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட ,முதல் புரத அடிப்படையிலான தடுப்பூசியாகும்.   


Tags : India ,Drug Control Authority , India, 12-18 years old, NovaVox, Vaccine, Drug Control Commission
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...