×

புதுக்கோட்டை அருகே 2,300 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு-எஸ்பி நேரடி விசாரணை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டி அருகே அர்ச்சுணன் குளத்தில் 2300 லிட்டர் சாராய ஊறலை மதுவிளக்கு போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் குனமதி, சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி உள்ளிட்ட போலீசார் நேற்று புதுக்கோட்டை கட்டியாவயல் தொடங்கி வண்ணாரப்பட்டி வரை கல்லச்சாரய வேட்டை நடத்தினர்.

அப்போது வண்ணாரப்பட்டி, சீவகம்பட்டி, கவிநாரிபட்டி ஆகிய ரோந்து பணியை முடித்து கொண்டு, அர்ச்சுணன் குளம் பகுதியில் கண்காணித்தனர். அப்போது முட்புதரில் இருந்து தலைதெறிக்க இருவர் ஓடியுள்ளனர். இதனையடுத்து அந்த முற்புதருக்குள் சென்று பார்த்தபோது கள்ளச்சாராயம் காய்ச்சுதவற்கான மூலப்பொருட்கள் இருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது 7 பேரல்களில் 2300 லிட்டர் சாராய ஊரல் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 10 லிட்டர் சாராயம் இருந்தையும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபனிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி விசாரணையில் ஈடுபட்டார். இதனையடுத்து சாராய ஊறல்களை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் பேரல்களையும், 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து எடுத்து வந்தனர். மேலும், இதுகுறித்து புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Pudukkottai ,Destruction-SP , Pudukkottai: Police in Pudukkottai district have dumped 2300 liters of liquor in the Archunan pond near Washermanpatti.
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...