×

சின்னாளபட்டி பகுதியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் சூப்பர்-விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி, கலிக்கம்பட்டி, கோட்டைப்பட்டி, காமலாபுரம், பெருமாள்கோவில்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, தொப்பம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மல்லிகை, கனகாம்பரம், செண்டுபூ, செவ்வந்திப்பூ, ஜாதிமல்லி, காக்கரட்டான், கோழிக்கொண்டை, மருகு, சம்பங்கி, ரோஜா, பட்டுரோஜா, முல்லை உள்ளிட்ட பூக்களை பயிரிடுவது வழக்கம். தற்போது செவ்வந்தி பூவில் சாமந்தி பூ எனப்படும் ஒட்டுரக ஹைபிரிட் இனத்தை சேர்ந்த பூ செடிகளை பயிரிட்டுள்ளனர்.

தற்போது இச்செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதன் காரணமாக வயல்களில் மஞ்சள் மற்றும் வெள்ளைநிற ஆடையை விரித்தது போல் பூக்கள் காட்சியளிக்கின்றன. மேலும் பூக்களின் விலை ஏறுமுகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ரக பூக்கள் செடியில் பூத்த பின்பு ஒருவாரம் வரை உதிராமல் தாக்கு பிடிக்கும் என்பதால், விலையேற்றம் இருக்கும் நாட்களில் மட்டும் அதிகளவில் பூக்களை பறித்து பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்கின்றனர். தற்போது பூ மார்க்கெட்டில் சாமந்தி பூ கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. மேலும் விலையேற்றம் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.



Tags : Chinnalapatti , Chinnalapatti: Uthuppatti, Kalikampatti, Kottaipatti, Kamalapuram, Perumalkovilpatti near Chinnalapatti,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...