திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி

திருமலை: கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2020 மார்ச் 20ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்கபிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி நிறுத்தப்பட்டிருந்து. இந்நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.ஏ.சி.-1ல் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான  டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய தினம் அங்கப் பிரதட்சணம் டிக்கெட்  பெறும் பக்தர்களுக்கு  மறுநாள் அதிகாலை ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: