×

துளித்துளியாய்....

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இலங்கை சுழல் மஹீஷ் தீக்‌ஷனா இடம் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ஆர்சிபி அணியின் கேப்டனாக டூ பிளெஸ்ஸி நியமிக்கப்ட்டுள்ள நிலையில், ‘கேப்டன் பணிகளில் குறுக்கீடு செய்ய மாட்டேன். அவர் காட்டும் வழியில் செல்வேன். அதே நேரத்தில்  இக்கட்டான சூழலில் ஒரு ஆலோசகராக எனது யோசனைகளை சொல்வேன்’ என்று கோஹ்லி கூறியதாக முன்னாள்  வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் கேப்டன் வில்லியம்சன், வேகம் புவனேஷ்வர் குமார் தலைைமையில் இரண்டு அணிகளாகப் பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் மோதினர். அதில் வில்லியம்சன் அணி 20 ஓவரில் 147 ரன் எடுக்க, புவனேஷ்வர் அணி 15வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
* பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து கேப்டன் ஆரோன் பிஞ்ச், மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்காததால் மிகுந்த ஏமாற்றமடைந்தார். இந்நிலையில்,  கேகேஆர் அணியில் அவர் இணைய உள்ளார். அதற்கான ஒப்பந்தம் முடிந்துள்ள நிலையில்,  கொல்கத்தா அவருக்கு 9வது ஐபிஎல் அணி  என்பது குறிப்பிடத்தக்கது.
* மும்பை அணி முன்னாள் வீரர் லசித் மலிங்கா (இலங்கை) இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார். அவர் ‘அணியில் உள்ள பிரசித் கிரருஷ்ணா, நவ்தீப் சைனி போன்ற வீரர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கட்டாயம் சர்வதேச அளவில் ஜொலிப்பார்கள்’ என்று கணித்துள்ளார்.
*  ‘அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஒருங்கிணைப்புடனும் செயல்பட வேண்டும்’ என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கேட்டுக் கொண்டுள்ளார்.
* சிஎஸ்கே அணி சூரத்திலும், சன்ரைசர்ஸ் அணி சென்னையிலும் தங்கி பயிற்சி  செய்து வருகின்றன. இப்படி பல அணிகள் ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் நேற்று வெளி அரங்கில் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
* பஞ்சாப் கிங்ஸ் அணி, 13வது கேப்டனாக மயாங்க்  அகர்வால் தலைமையில் விளையாட உள்ளது.

Tags : துளித்துளியாய் ....
× RELATED துளித்துளியாய்...