×

அரசு சார்பில் மறுவாழ்வு மையம் அமைத்து சங்கரன்கோவில் அல்லது தென்காசி மாவட்டத்தில் உணவு, மருத்துவ வசதிகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: சங்கரன் கோவில் எம்எல்ஏ ராஜா கோரிக்கை

சென்னை: அரசு சார்பில் மறுவாழ்வு மையம் அமைத்து சங்கரன்கோவில் அல்லது தென்காசி  மாவட்டத்தில் உணவு, மருத்துவ வசதிகள் கிடைக்க  ஆவண செய்ய வேண்டும் சங்கரன் கோவில் எம்எல்ஏ ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.சட்டபேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்: சங்கரன்கோவில் தொகுதியில் ஆதரவற்ற குழந்தைகள், ெபண்கள், முதியோர்களுக்கு ஒருங்கிணைந்த வளாகம் ஆதரவற்ற இல்லம் அமைப்பது தொடர்பாக பரீசிலினையில் உள்ளது.சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ ராஜா பேசுகையில்: புதிதாக உருவாக்கப்பட் தென்காசி மாவட்டம் திருத்தலங்கள், சுற்றலா தளங்கள் நிறைந்த பகுதியாகும். சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில் பிரசித்த பெற்ற அருள்மிகு சங்கரநாரயண கோமதியம்மாள் திருக்கோவில் அமைந்துள்ள பகுதியாகும். இங்கு உறவுகளின் ஆதரவின்றி கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் யாசகத்தின் மூலம் தான் தங்கள் வாழ்வை நகர வீதியில் சுகாதாரமற்ற முறையில் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

 அவர்களை தன்னை தான் பராமரித்துக் கொள்ள முடியாத அளவு மன அளவில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அகவை தினத்தில் தொடங்கி இன்று வரை 27 நபர்களை பசில்லா தென்காசி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் விழுப்புரத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் பராமரித்து வருகின்றனர். அவர்களில் 6 நபர் நல்ல முன்னேற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை போல் தொடர்ந்து உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு வீதிகளில் யாசகம் பெற்று வாழும் மக்களை வாழ்வில் புது விடியல் பிறக்கும் விதமாக அரசு சார்பில் மறுவாழ்வு மையம் அமைத்து சங்கரன் கோவில் அல்லது தென்காசி மாவட்டத்தில் உணவு, மருத்துவ வசதிகள் கிடைக்க  ஆவண செய்ய வேண்டும். அமைச்சர் கீதா ஜீவன்: மறுவாழ்வு மையம் மாற்றுத் திறனாளிதுறை மூலம் செயல்பட்டு வருகிறது. ஏதாவது தொண்டு நிறுவனம் நிர்வாகிக்க, தொடங்கிட முன்வந்தால் அரசு மானியத்துடன்  செயல்படுத்திட முடியும். மறுவாழ்வு மையத்துடன் முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் மையம் அமைக்க முன்வந்தால் 75 சதவீதம் அரசு மானியம், 25 சதவீதம் தொண்டு நிறுவனம் மானியத்துடன் ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க அனுமதி வழங்கப்படும்.

மேலும் விழுப்புரம் வரை செல்ல வேண்டாம். கன்னியாகுமரி, நெல்லையில் மறுவாழ்வு மையம் உள்ளது. அங்கு சேர்த்து விடலாம். எந்ததொண்டு நிறுவனம் தொடங்க முன்வந்தால் அரசு உறுதுணையாக இருக்கும். சட்டமன்ற உறுப்பினர் ராஜா: நெல்லை காப்பகத்தில் அதிகம் பேர் உள்ளதால் தான் விழுப்புரம் கொண்டு சென்றோம். சங்கரன் கோவில்  276 அங்கன்வாடிகள் உள்ளது, அதில் 49 மையங்கள் தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு தான் இயங்கி வருகிறது. சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். அமைச்சர் கீதா ஜீவன்: துறையின் மூலம் கட்டிடம் கட்டுவது துறையின் பணியல்ல, எடுத்து செய்வது இல்லை, குழந்தைகளை பராமரிப்பது தான் துறையின் பணி, ஆண்டுக்கு  3 அங்கன்வாடி கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டித்தருகிறார்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி நிதியில் இருந்து கட்டிட தர மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் பேரவையில் கூறினார்.


Tags : Sankarankoil ,Tenkasi ,Sankaran Kovil ,MLA ,Raja , Set up a rehabilitation center on behalf of the government Need to document availability of food and medical facilities in Sankarankoil or Tenkasi district: Sankarankoil MLA Raja request
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...