×

தமிழக காவல் ஆணைய தலைவர் காரை வழிமறித்து அட்டகாசம்: காவலருக்கு அரிவாள் வெட்டு; கமிஷனர் நேரில் ஆய்வு

சென்னை: தமிழக காவல் ஆணைய தலைவராக முன்னாள் உயர் நீதிமன்றம் நீதிபதி சி.டி.செல்வம் உள்ளார். காவல் ஆணைய தலைவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், எப்போது முன்னாள் நீதிபதியுடன் காவலர் ஒருவர் பணியில் இருப்பார். அந்த வகையில் நேற்று காலை நீதிபதி தனது காரில் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றார். கார் கே.கே.நகர் வழியாக அசோக் நகர் சிக்னல் அருகே வந்தது. அப்போது சிக்னலில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. உடனே முன்னாள் நீதிபதியுடன் வந்த காவலர் சக்திவேல் என்பவர் காரில் இருந்து இறங்கி போக்குவரத்து சரிசெய்து நீதிபதி கார் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தினார்.

அப்போது மதுபோதையில் பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென நீதிபதி கார் முன்பு தங்களது பைக்கை நிறுத்தியபடி காவலர் சக்திவேலிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது காவலர் வழியை விட்டு பேசுங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார். இதில் பைக்கில் வந்த 3 நபர்கள் கடுமையான வார்த்தைகளில் பேசி காவலர் சக்திவேலின் தலையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓங்கி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த காவலரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு காவலருக்கு தலையில் 9 தையல் போடப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட காவலர் சக்திவேல் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பி ஓடிய 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய தனிப்படை ஒன்று அளித்தும் உத்தரவிட்டார்.

Tags : Tamil Nadu Police , Tamil Nadu Police Chief hijacks car: Scissors cut to policeman; Inspection in person by the Commissioner
× RELATED சேமநல நிதியில் இருந்து 16 காவலர்...