×

அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் விவசாயிகளுக்கு விரைவில் மும்முனை மின்சாரம்

சென்னை: விவசாயிகளுக்கு விரைவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். பேரவையில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளின் எண்ணிக்கையை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் புதிய 3 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தது. கடந்த ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை. முதல்வரின் ஆணைப்படி கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு  விவாதம் நடந்தது.

Tags : Minister ,Senthilpalaji , Minister Senthilpology Information Three-phase electricity for farmers soon
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்