மதுரை, கரூரில் 104 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது. கடந்த வாரம் சுமார் 10 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இந்நிலையில், அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்றுக் கொண்டும் வடக்கு நோக்கியும் நகர்ந்து படி இருந்தது. இதன் காரணமாக தரைக் காற்று உறிஞ்சப்படுவது குறையத் தொடங்கியது. அதனால் வெயிலின் அளவும் படிப்படியாக குறைந்தது. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக வால்பாறை யில் அதிகபட்சமாக 60 மிமீ மழை பெய்தது. முசிறி 50மிமீ, சேலம் 40மிமீ, தர்மபுரி, ஆத்தூர், கீழ் பெண்ணாத்தூர், ஏற்காடு 30மிமீ மழை பெய்துள்ளது. இருப்பினும் சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, பகுதிகளில் 99 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெயில் நிலவியது. ஈரோடு, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருத்தணி, வேலூர் ஆகிய பகுதிகளில் 102 டிகிரி  முதல் 104 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதற்கிடையே, அந்தமான் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மதியத்துக்கு பிறகு  மியான்மர் அருகே கரையைக் கடந்தது.

Related Stories: