பள்ளிப்பட்டு அருகே ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிப்பட்டு தாலுகா கிருஷ்ணராஜகுப்பம் ஊராட்சியில் கோரகுப்பம் ராஜாவூரில் விளைநிலங்களுக்கு மத்தியில் செல்லும் மழை நீர் வரத்து கால்வாயை அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

மழை காலங்களில் மலை பகுதிகளிலிருந்து பாலகிருஷ்ணாபுரம் ஏரிக்கு செல்லக்கூடிய மழைநீர் கால்வாய் பொக்லைன் இயந்திரம் கொண்டு மூடி நிலமாக மாற்றி உள்ளார். தனிநபரின் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் விளை நிலங்களில் பாய்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது.  தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நீர்வரத்து வரத்து கால்வாய்  மீட்டெடுத்து விளை நிலங்களில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் கிராமத்தில் மழை வெள்ளம் தடுக்கும் வகையில் வருவாய் துறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: