×

ராசிபுரத்தில் கனமழை சூறைகாற்றுக்கு மார்க்கெட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகளவில் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து நள்ளிரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 1மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் சற்று குளிர்ந்த சீதோஷண நிலை நிலவி வருகிறது. இதேபோல் ராசிபுரம் அடுத்த பட்டணம், வடுகம், காக்காவேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

ராசிபுரம் நகரின் மையப்பகுதியில் கடந்த 100 வருடங்களாக தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இதில் 30 வருடங்களுக்கு முன்பு மார்க்கெட்டில் சிறு வியாபாரிகளுக்கு ஆஸ்பெஸ்டாசாலான மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று சூறைகாற்றுடன் பெய்த கனமழையால் மார்க்கெட்டில் உள்ள மின்கம்பம் மேற்கூரை மீது சாய்ந்தது. இதில் மேற்கூரை முழுவதும் சரிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் வியாபாரிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல், மார்க்கெட்டில் பழுதடைந்த மேற்கூரைகளை சீரமைத்து தரவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Rasipuram , In Rasipuram, heavy rain, market, roof, collapsed
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து