திருச்சி குழுமாயி அம்மன் கோயில் அருகே கோரையாறு கரையோரம் உலா வரும் 7 அடி நீள முதலை

திருச்சி: திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தொட்டி பாலம் கோரையாற்றின் கரையோரம் நேற்று 7 அடி நீளமுள்ள முதலை உலா வந்தது. அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் தண்ணீருக்குள் சென்று விடுகிறது. இல்லாவிட்டால் கரைக்கு வந்து படுத்து கொள்கிறது. இதனால் அந்த பகுதியில் நடமாடும் ெபாதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

வனத்துறையினருக்கு தகவல் அளித்து விரைந்து வந்து பிடிக்க முற்பட்டாலும் முதலை தப்பி விடுகிறது. இதுகுறித்து மாநகர போலீசார் கூறுகையில், குழுமாயி அம்மன் கோயில் தொட்டி பாலம் மற்றும் அருகில் ஓடும் தண்ணீரில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம். இந்த பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம். சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு முதலை இங்கு தஞ்சம் அடைந்திருக்கலாம் என்றனர்.

Related Stories: